Skip to main content

மதகலவரத்தை லாவகமாக கட்டுப்படுத்திய சென்னை மாநகர காவல்துறைக்கு சபாஷ்!

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
மதகலவரத்தை லாவகமாக கட்டுப்படுத்திய சென்னை மாநகர காவல்துறைக்கு சபாஷ்!

இந்த ஆண்டு வினாயகர் சதூர்தியை முன்னிட்டு பொதுமக்களும் இந்துமுன்னணியை சேர்ந்தவர்களும் சென்னை மாநகரில் 3000க்கு அதிகமான வினாயகர் சிலைகள் அமைத்திருந்தார்கள் வழக்கமாக வினாயகர் சிலையை கடலில் கரைக்க வார விடுமுறை நாட்கள் ஆன சனி, ஞாயறு கிழமைகளில் பட்டினம்பாக்கம் சீனிவாசாபுரம், பாலவாக்கம், நீலாங்கரை, எண்ணூர், காசிமேடு துறைமுகம் ஆகிய இடங்களில் கடலிகரைக்க ஏற்பாடுகள் நடக்கும் ஆனால் இந்த முறை செப்டம்பர் 2ம் தேதி சனிக்கிழமை இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரித் பண்டிகை என்பதால் அந்த தேதியில் வழக்கமாக வினாயகர் சிலை ஊர்வலத்தின் போது சர்ச்சைக்குரிய இடமான ஐஸ் அவுஸ் பகுதியில் பிரச்சனை ஏற்படுவது வழக்கம் ஆகவே திருவல்லிக்கேணி  பாரதிசாலை முதல் ஐஸ் அவுஸ் நோக்கி ஊர்வலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையும் வினாயகர் சிலை ஊர்வலமும் ஓரே நேரத்தில் நடக்கும்பச்சத்தில் மதக்கலவரம் போன்ற சில அசாம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது அதற்காக இரண்டு தரப்பிலும் ஆயுத்தமாகிவருவதாகவும் உளவுதுறைக்கு தகவல் வர இந்த முறை அதற்கு முன்பே சிலைகளை கரைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார், ஆனால் அதே செப்டம்பர் 2 ஆம் தேதி தான் வினாயகர் சிலையை கடலில் கரைக்க இந்துமுன்னணி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது..!

சுதாரித்துக்கொண்ட சென்னை மாநகர போலீஸ் அனுமதி மறுத்ததோடு, பக்ரீத்துக்கு முன்பே சிலைகளை பலத்த பாதுகாப்போடு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது இருப்பினும் ஆகஸ்ட்டு 31 ஆம் தேதி திருவல்லிக்கேணி பாரதிசாலையில் இருந்து ஐஸ் அவுஸ் வழியாக ஊர்வலம் நடத்த முயன்ற இந்து அமைப்பினரை போலீஸ்சார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இந்து அமைப்பபை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து விடுதலை செய்யப்பட்டார்கள், அதே போல சர்ச்சை குறிய பகுதியில் கடைசிவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் கலத்தில் பாதுகாப்பு பணிகளை கண்காணித்தார்.

- அரவிந்த்

சார்ந்த செய்திகள்