Published on 13/02/2021 | Edited on 13/02/2021

மெட்ரோ ரயிலில் நாளை பொதுமக்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வாஷர்மேன்பேட்டில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பகுதி- 1 விரிவாக்க வழித்தடத்தை, நாளை (14/02/2021) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (14/02/2021) மட்டும் மதியம் 02.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.