Published on 25/04/2020 | Edited on 25/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் எதுவும் திறந்திருக்க அனுமதி இல்லையென கூறப்பட்டுள்ளது. எனவே, நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை இன்றே வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். இதனால், சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையம் எதிரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் 60 அடி சாலையில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் அலைமோதினர்.