சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது.
இந்த கோயில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பே, தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர் கிழங்கிந்திய கம்பெனி ஆட்சி அமைந்தப்பின், தற்போதுள்ள கோட்டை கட்டிமுடித்தபின், இந்த கோயில் கோட்டை வளாகத்தின் உள்ளே இருந்ததால் ஆங்கிலேயர்கள், இக்கோயிலை தம்பு செட்டி தெருவில் இடம் ஒதுக்கி புதிய கோயிலை கட்ட, அக்கோயில்லை பாத்தியபட்ட விஸ்வகர்மர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1639-ல் இக்கோயிலை தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. 1677-ல் சத்ரபதி சிவாஜி இக்கோயிலில் ரகசியமாக வழிபட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இக்கோயிலின் புதிய அறங்காவலர் தேர்தல் நடத்த சில சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்து. நீதிமன்ற உத்தரவின் பெயரில், புதிய அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சி.லெட்சுமனன் முன்னிலையில், சர்வேஸ்வரன், யுவராஜ், மோகன், ரமேஷ், சுப்பிரமணி ஆகியோர் அறங்காவலர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் அறங்காவல் குழுத்தலைவராக சர்வேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். பாரத விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீ சிவாஜ் ஞானாச்சாரியார் பதவியேற்று வைத்தார்.