Published on 01/01/2021 | Edited on 01/01/2021

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி ஜனவரி 4-ஆம் தேதி காலை 09.30 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் சஞ்ஜிப் பானர்ஜிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரிக்கு நாளை (02/01/2021) பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக வினீத் கோத்தாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.