வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கடைப்பிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 384வது சென்னை தினமாகும். இதையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை தினம் குறித்து ட்விட்டரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். வியப்பூட்டும் கலாச்சார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்தத் தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்துக் கொண்டாடுவோம்” எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்ட பிறகு ஆளுநர் மெட்ராஸ் எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.