Published on 05/11/2020 | Edited on 05/11/2020

சதுர்வேதி சாமியார் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 4- ஆம் குற்றவாளி சார்பில் ஆஜராகி, முக்கிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் முன், வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன், முக்கிய குற்றவாளியான, தலைமறைவாக உள்ள சதுர்வேதியை ஏன் இன்றுவரை கைது செய்யவில்லை என்று கேட்டார்.
அதற்கு உடனடியாக நீதிபதி, அரசாங்க தரப்பு வழக்கறிஞரிடம், சதுர்வேதியை ஏன் இன்றுவரை கைது செய்யவில்லை என்று கேட்டார். மேலும் போலீஸ் சிறப்பு அணியில் உள்ள போலீஸ் உதவி ஆணையரிடம், இன்னும் ஒரு வாரத்தில் முக்கிய குற்றவாளியான சதுர்வேதியைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.