2023-24 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்ய இருக்கிறார். புதிய சாலை வசதிகள், சிங்கார சென்னை 2.0 திட்டம், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டு பட்ஜெட் 7,000 கோடிக்கான வரவு செலவுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மா உணவகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி புதிய பொலிவுடன் அம்மா உணவகங்களை நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம்,அதேபோல் மாநகராட்சி ஊழியர்கள் மூன்று மற்றும் நான்காம் நிலை பணியாளர் நியமனம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கீடு அவசியம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.