Skip to main content

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப்" திட்டம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் !

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப்பை" பெறும் வகையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதற்கான சிறப்பு இணைய தள சேவையை தொடங்கியுள்ளது. இதன் இணைய தள முகவரி : https://scholarships.gov.in/home ஆகும். இதில் "National Scholarship Portal" என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் அனைத்து மாநில மாணவர்களும் "Scholarship" பெறலாம்.

scholarship




இந்த இணையதளத்தில் மூன்று வகையான ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதன் வகைகள்

1.Pre-Matric Scholarship Scheme - 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த பெயரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

2. Post - Matric Scholarship Scheme - 
11th, 12th , ITI, B.com, B.Sc, B.Tech Medical வரை பயிலும் மாணவர்கள் இந்த "Option"யை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

3. Top Class Scholarship Scheme - இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களான IITs மற்றும் IIMs படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4.Merit Cum Means Scholarship Scheme.(MCM) - தொழில்நுட்ப கல்வியை பயிலும் மாணவர்கள் மற்றும் ME உள்ளிட்ட முதுகலை பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

"National Scholarship Portal"-லில் எவ்வாறு விண்ணப்பிப்பது ?

முதலில் இணையதள முகவரி : https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction சென்று "Registration" செய்ய வேண்டும். 

இதன் பிறகு விண்ணப்பதாரருக்கு "User Name" மற்றும் "Password" கிடைக்கும். இதனை பயன்படுத்தி " Scholarship"க்கு மாணவர்கள் எளிதில்  விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர்கள் இந்த "Scholarship" Portal யை Login செய்து "Renewal" என்ற "Option"யை தேர்வு செய்த பிறகு விண்ணப்பத்தை பூர்த்திச்செய்யலாம்.
 

scholarship


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

1.பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை "ஸ்காலர்ஷிப்" க்கு விண்ணப்பிக்க "     
   ஆதார் அடையாள அட்டை " கட்டாயம் தேவை.
2. மேலும் மாணவர்களின் வங்கிக்கணக்கு புத்தகம் தேவை.
3. பள்ளி படிப்பு சான்றிதழ் தேவை.
4. சாதி சான்றிதழ் தேவை.
5. வருமான சான்றிதழ் தேவை.
6. பிற்பபு சான்றிதழ்.

உள்ளிட்ட ஆவணங்கள் "அசல்" தேவை .ஏனெனில் இத்தகைய ஆவணங்கள் "Scan" செய்து "National Scholarship Portal" லில் பதிவேற்றம் செய்தால் பதிவு செய்தற்கான "Acknowledgement No" பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கும் மற்றும் ஈமெயில் முகவரிக்கும் வரும்.

பின்பு இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம். பின்பு சில மாதங்கள் கழித்து பதிவு செய்யப்பட்ட "வங்கிக்கணக்கிற்கு" கல்வி உதவி தொகையை மத்திய அரசு விடுவிக்கும். கல்வி உதவித்தொகை வரவில்லை எனில் "National Scholarship Portal" அலுவலகத்தை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

"National Scholarship Portal" க்கான " உதவி மையம் உள்ளது. இதற்கான உதவி எண் : 0120 - 6619540
ஈ-மெயில் முகவரி : helpdesk@nsp.gov.in

எந்தெந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு "ஸ்காலர்ஷிப்" வந்துள்ளது என்பதை இணையதளம் மூலம் அறியலாம். இதற்கான இணைய தள முகவரி : https://scholarships.gov.in/fresh/onlineSanctionedList

விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் ஏதேனும் குறை இருப்பின் இணையதளம் மூலம் புகார் செய்யலாம். இதற்கான இணையதள முகவரி : https://scholarships.gov.in/fresh/complaintsPage ஆகும். மேலும் புகார் மனுவின் நிலையை அறிய இதே இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர்க்கு இந்த மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் தெரியவில்லை. எனவே இந்த வழிமுறையை பயன்படுத்தி வரும் கல்வியாண்டில் மாணவர்கள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று சமுதாய வளர்ச்சி மற்றும் புதிய அறிவியல் வளர்ச்சியை கண்டுப்பிடித்து இந்திய நாட்டை அறிவியல் தொழில்நுட்ப பாதையில் கொண்டு செல்வோம் என உறுதியேற்போம்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்