Skip to main content

வாய்க்கால் தூர்வாரியதாக லட்ச கணக்கில் மோசடி- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம் 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் மழை காலத்திற்கு முன்னதாக அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

 Scam in thiruchy


அரசாங்கமும் கடைசி நேரத்தில் தூர்வாரியதாக பரபரப்பாக வேலை செய்தது போல் காண்பித்ததும், தூர்வாராமல் தூர்வாரியதாக கணக்கு காண்பித்து இலட்ச கணக்கில் மோசடி நடந்து உள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் 13 இலட்சம் மோசடி என்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அத்தனை வாய்க்கால்களையும் தூர்வாரிய கணக்குளை முறையாக விசாரணை நடந்த வேண்டும் என்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

 

 Scam in thiruchy

 

திருச்சி சோமரசம் பேட்டை ஊராட்சியில் கீழ வயலூர் வாய்க்கால் உள்ளது. 2017-2018 ம் ஆண்டு முதல் 2018 - 2019 வரை கீழ வயலூர் வாய்க்கால் தூர்வாரியதாக 13 இலட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஆனால் வாய்க்கால் தூர்வரப்படவில்லை. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தூர்வாரியதற்காக பணம் செலவிடப்பட்டது உறுதியாகி உள்ளது.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் முறைகேடு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. எனவே கீழவயலூர் வாய்க்காலை உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, முறைகேட்டை கண்டறிய வேண்டும். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட விவசாய திமுக தொழிலாளர் அணியை சேர்ந்த துரைபாண்டியன் மற்றும் சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

சார்ந்த செய்திகள்