பி.காம் படித்த இருபத்தி நான்கு வயது இளம்பெண் சுவேதா. ஈரோடு இந்திரா நகரில் வசிக்கிகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ஜெயின் இவரது மனைவி இந்து பாலா. இவர்களது மகள் தான் சுவேதா. ஜெயின் சமூகத்தினர்.
ஈரோட்டில் உள்ள ஜெயின் கோயிலில் அதிக நேரம் வழிபாட்டில் ஈடுபடுவார் சுவேதா. இதற்கிடையே துறவு வாழ்க்கை வாழ முடிவு செய்தார் சுவேதா. இதற்கு பெற்றோர்களும் சம்மதம் கொடுக்க இதற்கான விழா ஏற்பாட்டை செய்தனர். இவர்களது உறவினர்கள் , நண்பர்கள், ஜெயின் சமூகத்தினர் புடைசூழ ஈரோடு ஜெயின் கோயிலுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த சுவேதா அங்கு கோயிலில் புத்தாடை அணிந்து தயாராக இருந்த குதிரை மீது ஏறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு கொடி அசைக்க சுவேதாவின் குதிரை ஊர்வலம் ஈரோடு நகரில் தொடங்கியது. மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று மற்றொரு ஜெயின் கோயிலில் நிறைவடைந்தது.
இளம்பெண் சுவேதா துறவு வாழ்க்கைக்கு குஜராத் மாநிலத்திற்கு விரைவில் செல்லவுள்ளார். அங்கு மொட்டையடித்து வெள்ளை ஆடை அணிந்து ஜெயின் சாமியார்களுடன் பெண் துறவியாக வாழவிருக்கிறார்.