பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியின் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி அறிக்கை வெளியிடுள்ளார். அதில்,
![central Budget ... Edapati Welcome; Stalin's opposition](http://image.nakkheeran.in/cdn/farfuture/W_-G1yr0z0Fw4yHIdrhVQR7yY7Y2hB9qWwStit-DFEc/1580563550/sites/default/files/inline-images/tuyhtyty.jpg)
நாட்டுமக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைத்துள்ளது. விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சியை மையமாக வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிக்கும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். விளைநிலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்தற்கு தமிழகம் சார்பில் நன்றி எனக் கூறியுள்ளார்.
அதேபோல் இந்த மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு எவ்வித பயனும் அளிக்காத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
![central Budget ... Edapati Welcome; Stalin's opposition](http://image.nakkheeran.in/cdn/farfuture/JUAvQtxGuY_1CpIH7EywPH2Yddp39Rz3-lcRpe1xSE8/1580563571/sites/default/files/inline-images/rtyty.jpg)
கீழடி ஆய்வுகளின் முடிவுகளை மாற்றி, வரலாற்றை திருத்தவும், திரிக்கவும் முயல்வதை தமிழகம் சகித்து கொள்ளாது. பாஜக விரும்பும் கலாச்சர திணிப்பை செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. பட்ஜெட்டில் அர்த்தமுள்ள திட்டங்களை எதையும் காண முடியவில்லை. மத்திய அரசிற்கு தொலைநோக்குப்பார்வை இல்லை, தொலைந்து போன பொருளாதாரத்தை மீட்க வழியும் தெரியவில்லை. மத்திய பட்ஜெட்டில் திமுகவிற்கு மனநிறைவில்லை என்று கூறியுள்ளார்.