செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன்
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதற்கு கணேஷ்குமாரிடம் 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், செந்தில்பாலாஜி சென்னையிலேயே தங்கி விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை முன் ஜாமீன் அளித்தார்.