Skip to main content

இப்பதான் சொன்னீங்க சி.எம்.ன்னு.. அதுக்குள்ள எங்க போனீங்க...

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
bjp


கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மீடியாக்களில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவும், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று செய்திகள் வெளியாகின. எடியூரப்பா ஆட்சி அமைக்கிறார் என்று பட்டி தொட்டி எங்கும் பேச்சுகள் எழுந்தன. 
 

கர்நாடக பாஜக அலுவலகத்தில் வான வேடிக்கை விண்ணை புளந்தது. இனிப்புகள் வாரி வழங்கப்பட்டன. எடியூரப்பா வாழ்க, முதல் அமைச்சர் எடியூரப்பா என முழக்கங்கள் எழுந்தன. மீடியாக்களில் பாஜகவினர் மோடி அலை என்று பேட்டி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்க்க தயார் என்றும், அக்கட்சியின் தலைவர் குமாரசாமியை முதல்வராக ஏற்க தயார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்தது. 

 

bjp


 

அப்படியா... இதோ வரேன்னு சொல்லிய குமாரசாமி, தனது வேட்பாளர்களை பத்திரப்படுத்தினார். சுயேட்சைகள் இருவருக்கும் வலை வீசினார். தேவகவுடாவுடன் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆளுநரை சந்திக்க திட்டம் தீட்டினர். அனைத்து தொகுதி முடிவுகளுக்காகவும் காத்திருக்கின்றனர்.
 

இந்த கூட்டணி முடிவு மக்களிடையே பரவியதையடுத்து, கர்நாடக பாஜக அலுவலகம் அமைதியானது. முதல் அமைச்சர் எடியூரப்பா என்ற முழக்கம் கேட்கவில்லை. பெருமளவு கூடியிருந்த தொண்டர்கள் கூட்டமும் கொஞ்சம் குறைந்தது. எடியூரப்பா அருகில் இருந்தவர்கள், நீங்கதான் சி.எம்., வாழ்த்துக்கள் என்று சொன்னவர்கள் அமைதியானார்கள். இதையெல்லாவற்றையும் பார்த்த எடியூரப்பா, யாரும் கவலைப்பட வேண்டாம், அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வரட்டும். சுயேட்சைகளிடம் பேசி பாருங்கள். அதற்கான குழுவை அமையுங்கள். அதற்குள் யாரும் சோர்ந்துவிட வேண்டாம் என கூயியிருக்கிறாராம். 
 

சார்ந்த செய்திகள்