Skip to main content

நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
vp



மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

நடிகர் விஜய், தான் முதல்வரானால் உண்மையாக இருப்பேன். நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிதற்கு, 

 

எல்லோரும் எம்ஜிஆர் ஆகவும், ஜெயலலிதா ஆகவும் முடியாது. இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினி மட்டும்தான். 
 

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எந்த துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பலர் பத்திரிகை மற்றும சினிமா துறையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளனர்.
 

ஏதோ தமிழகம் புறப்போக்கு நிலம்போல் நாதியில்லாமல் கிடப்பது போன்று சிந்தனையுடன் உள்ளே வரக்கூடாது. 
 

லஞ்சம் வாங்குபவர்கள் என்று குறிப்பிட்டு பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. அடிப்படி யாரும் இருந்தால் அவர்களை குறிப்பிட்டு காட்ட வேண்டும். அவ்வாறு கூறினால் நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயதரணி உள்ளே; பொன்னார் வெளியே! - பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Pon Radhakrishnan setback in BJP due to Vijayadharani arrival

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்து இலவு காத்த கிளியாக இருந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, தமிழக சட்டமன்ற குழுத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார். பொதுவாக சிட்டிங் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவில் இணைந்தால் ஜெ.பி.நட்டாவை சந்திப்பது வழக்கம்.

அதேபோல் விஜயதாரணியும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது புதிதாக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவோ அணை கட்டிப் பார்த்தும் செல்வப் பெருந்தகைக்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்த விஜயதாரணி, இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. புலி வருது புலி வருது கதையாய், கடந்த ஒரு மாதகாலமாக அரசல்புரசலாக பேசப்பட்டு வந்த விஜயதாரணி கட்சித் தாவல் கதைக்கு தற்போது எண்டு கார்டு போடப்பட்டுள்ளது.

இதன்பிறகு விஜயதாரணி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பா.ஜ.கவில் இணைந்துள்ளேன். பாஜக பாத யாத்திரையால் தமிழக பா.ஜ.கவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மறுபுறம் பாஜகவின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்த விஜயதரணி, வரும் லோக்சபா தேர்தலில் சீட்  தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். அதில் நான் தோற்றுப் போனால் தன்னை ராஜ்யசபா எம்பியாக்க வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் எழுந்துள்ள நிலையில், மக்களுக்கு நல்ல பரிட்சயமான தலைவராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக வேறு திட்டங்களை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாஜகவை கன்னியாகுமரி பகுதியில் வளர்த்தவர் எனும் இமேஜ் தேசியத் தலைமைக்கு இருப்பதால், அவருக்கு கவர்னர் பதவி தேடிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், பஞ்சாப் கவர்னர் பதவியை பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இன்னொரு தரப்பினர், மாநிலத் தலைமையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பொன்னாரை ஓரங்கட்ட நடக்கும் அரசியல்தான் இது என்றும் கமலாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் இதற்கெல்லாம் முடிவு கிடைத்துவிடும்.

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.