Published on 17/01/2019 | Edited on 17/01/2019

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற தலைப்பில் பாராட்டு விழா வரும் பிப்ரவரி 2,3 ஆம் தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று அழைப்பிதழை கொடுத்தார்.