காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வழக்கறிஞர்கள், தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு வரும் 29ம் தேதிக்குள் முடிவடைகிறது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வரின் முதன்மைச்செயலர் சாய்குமார் பங்கேற்றார். பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரும் சனிக்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். அதற்கான மனுத்தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே பரிந்துரை செய்தார். காவிரி வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதாடியவர் சேகர் நாப்தே. இவரின் பரிந்துரையை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.