காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
காவிரி நீர் பங்கீடை சுமுகமாக மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.