Skip to main content

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா புகைப்படத்தை வைக்க தடை கேட்ட வழக்குகள் தள்ளுபடி

Published on 02/04/2018 | Edited on 02/04/2018
jayalaliyha


 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது, அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படங்களை அகற்றக்கோரிய வழக்குகளில் மனுதாரர் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் அதுதொடர்பான 5 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதேபோல, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் அவரது நினைவாக அரசு திட்டங்களில் அம்மா பெயர் வைக்கப்பட்டது. இவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றமத்தில் 5 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. 

 

Madras-High-Court 600.jpg


 

சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததால், அவரது புகைப்படத்தை அரசு அலுவலகத்தில் வைப்பதும், அரசு செலவில் நினைவிடம் அமைப்பதும் சட்ட விரோதமானது என்று, சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் பாமக கே.பாலு, சி.குமரன் ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.  
 

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ. செல்வம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்ந்த 5 மனுதாரர்கள் தரப்பிலும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. அதனால் 5 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்