முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் ஆண்கள் சிறையில் கடந்த 28 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார் முருகன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி, அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்ட்கள் மற்றும் சார்ஜர் வைத்திருந்ததாக சிறைத்துறையால் வழக்கு தொடுக்கப்பட்டது.
பாகாயம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வேலுர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்று வந்தது.
29.4.18ஆம் தேதி சனிக்கிழமை இந்த வழக்கில் இருந்து முருகனை விடுவிப்பதாக வேலூர் ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் தீர்ப்பு வழங்கினார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் மீண்டும் வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தது போலிஸ்.
தன் மீதான இந்த வழக்கில் முருகனே ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.