Published on 06/12/2018 | Edited on 06/12/2018
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கடந்த 03.12.2018 திங்கள்கிழமை சென்னை ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகை அருகே தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைகோ, கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தியாகு, திருமுருகன் காந்தி உள்பட 687 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகை அருகே தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கிண்டி போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.