Skip to main content

இருசக்கர வாகனத்தை மோதிய கார் - தூக்கிவீசப்பட்டு இருவர் பலி

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Car Bike accident two passed away in perambalur trichy road

 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா மேட்டுப்பாளையம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவர், திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரை ஓட்டிச் சென்றார். அந்தக் கார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஜங்கால்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. முன்னால் அடையாளம் தெரியாத 23, 28 வயது மதிக்கதக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

 

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காரின் இடிபாடுகளில் சிக்கி பிரபாகரன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாகச் சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Car Bike accident two passed away in perambalur trichy road

 

பின்னர் போலீசார் 2 வாலிபர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தில் இறந்த 2 வாலிபர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்