கரோனா பாதிப்பு நாடு முமுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பிரதமா் மோடி வேண்டுகோளை ஏற்று 22-ம் தேதி நாடு முமுவதும் சுய ஊரடங்கை பொதுமக்கள் நடைமுறைப்படுத்தினாா்கள். ஆனாலும் கரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருந்து விடுபடவில்லை.
இந்தநிலையில் தமிழக அரசு நேற்று (24 -ம் தேதி) அனைத்து மாவட்டங்களில் 144 தடை உத்தரவை நிறைவேற்ற முடிவெடுத்தது. இதனால் மக்கள் தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமோ அல்லது கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். 24-ம் தேதி முதல் 31ம் தேதி வரை தடை உத்தரவு அச்சத்தில் இருந்த மக்கள் குமாி மாவட்டத்தில் மாலையிலே பெரும்பாபாலான கடைகளும் அடைக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.
இந்த நிலையில் தான் இரவு 11 மற்றும் 12 மணியைக் கடந்து காய்கறி கடைகளில் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. இரவு என்பதைக் கூட மறந்து மக்கள் காய்கறிகளைக் குடும்பத்தோடு வாங்கிச் சென்றனா்.