Skip to main content

வாலாஜா அருகே லாரி மீது கார் மோதி விபத்து... காரில் பயணித்தோர் உயிரிழப்பு...

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

cc

 

சென்னை சோழிங்கநல்லூர் சாதிக் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து காரில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு ஜனவரி 2-ம் தேதி காலை வந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு. அன்று இரவு 7 மணியளவில் காரில் புறப்பட்டு சோழிங்கநல்லூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வாலாஜா நகரை தாண்டி செல்லும்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

காரில் பயணம் செய்த சாதிக் அலி (40), இவரது மனைவி பர்வீன் (35), தந்தை அன்வருதீன் (70), தாய் அலாமா பேகம் (65) ஆகியோர் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளனர். வாலாஜா போலீஸார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இ.சி.ஆர். சாலையில் கோர விபத்து; 4 பேர் பலி!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Accident in ECR Road four passes away

கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த சாலைகளில் மாடுகள் படுத்திருப்பதும், சாலையை மறைத்து சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து அடைத்து நிற்பதுமே சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் சென்றுள்ளனர். இந்த கார் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும் போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச் சென்ற கார் சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், சீமைக்கருவேல மரங்கள் சாலையில் மறைத்து நின்றதால் இந்த விபத்து நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இப்படி வளரும் புதர்களை அகற்றாமல் விட்டதால் தான் பாலம் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகி 4 உயிர்கள் பலியாகிவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Next Story

ஓட்டுநரின் சாமர்த்தியம்; தப்பிய பொறியாளர் குடும்பம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Car fire accident in trichy highway

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கே.வி.ஆர். சுப்பிரமணியன் (43). பொறியாளரான இவர், பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தனது மகன் ஹரியை, பொள்ளாச்சியில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் விட்டுச் செல்வதற்காக மனைவி, கீதா (39) மற்றும் மகனுடன் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டார். காரை ஓட்டுநர் மணிகண்டன் ஒட்டியுள்ளார். நேற்று (புதன்கிழமை) மாலை திருச்சி வந்த நிலையில், கீதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி செல்லும் முடிவை கைவிட்டு மீண்டும் தஞ்சை திரும்பியுள்ளனர்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இரவு 7.30 மணியளவில் பாலத்தின்மீது கார் சென்று கொண்டிருந்தது. பொன்மலை ரயில்வே பாலம் பழுது காரணமாக, போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்போது திடீரென இவர்களது காரின் முன்பகுதியிலிருந்து கரும்புகை வந்துள்ளது. இதனையடுத்து சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக அனைவரையும் கீழே இறங்கச்சொல்லியுள்ளார். காரிலிருந்து அனைவரும் இறங்கிய சற்று நேரத்தில் காரின் முன்பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் சேதமானது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அனைவரும் காரிலிருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.