Published on 16/07/2024 | Edited on 16/07/2024
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து தொழிலதிபர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிலதிபர்கள் தரப்பில் வாதிடுகையில், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கனிமவள சட்டம் வராது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிமன்றம், மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் மீதான அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.