Published on 12/04/2019 | Edited on 12/04/2019
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுடப்பட்ட நிலையில் தூத்துகுடி காப்பர் உற்பத்தி தொழிற்சாலையான ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதனையடுத்து ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடவேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.