குமாி மாவட்டம் கோட்டாா் பஜாா் என்பது முக்கிய வாய்ந்ததாகும். இங்கு குமாி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வந்து தான் பொருட்கள் வாங்கி செல்கின்றனா். அதேபோல் திருவனந்தபுரத்தில் உள்ள பொிய பஜாரான சாலை பாஜா் வியாபாாிகளும் கோட்டாாில் இருந்துதான் மொத்தமாக பொருட்களை வாங்கி செல்கின்றனா்.
இதனால் கோட்டாா் பஜாா் எந்த நேரமும் பரபரப்போடு மக்கள் நெருக்கமாகவே காணப்படும். அதேபோல் கன்னியாகுமாிக்கு செல்லும் ஒரே பாதையும் இதுதான் மேலும் ரயில் நிலையமும் கோட்டாா் பஜாா் அருகில் இருப்பதால் வாகனங்களும் மூச்சு முட்டிதான் செல்லவேண்டும். இதனால் கோட்டாா் பஜாரை வாகனங்கள் கடந்து செல்ல பலமணி நேரங்கள் காக்க வேண்டும்.
இந்நிலையில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோாிக்கையை ஏற்று கோட்டாாில் இருந்து செட்டிக்குளம் வரையிலான சாலை விாிவாக்கத்திற்கு அரசும் நாகா்கோவில் மாநகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுத்து அதற்கான சாலை விாிவாக்க குறியீடுகளும் போடப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் உள்ள தேசீக விநாயகா் கோவிலுக்கு சொந்தமான இடங்களையும் மாநகராட்சிக்கு கொடுத்து ஒப்பந்தமும் போடபட்டுள்ளது.
இந்நிலையில் கோட்டாா் - செடடிக்குளம் சாலையை விாிவாக்கம் செய்தால் வணிக நிிறுவனங்களும் வணிகா்களும் பாதிக்கப்படுவாா்கள். இதனால் அந்த திடடத்தை கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை கோாிக்கை விடுத்தது.
இந்நிலையில் சாலை விாிவாக்கத்திற்கு எதிா்ப்பு தொிவித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் தலைவா் வெள்ளையன் தலைமையில் இன்று நாகா்கோவிலில் கலெக்டா் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான வணிகா்களும் கலந்துகொண்டனா். இதனைத்தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட வெள்ளையன் உட்பட வணிகா்களை போலிசாா் கைது செய்தனா். இதனையொட்டி இன்று கோட்டாா் பஜாாில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.