திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசெந்தூர் அருகே இருக்கும் எவரெடி ஸ்பின்னிங் நிர்வாகம் எதிரே ஓடிக்கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப் பிடித்து எரிந்தது, அதில் பயனித்த 42 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மெயின் ரோட்டில் மகராஷ்டிரா பகுதியை சேர்ந்தவர்கள் பழனி, ராமேஸ்வரம், திருப்பதி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு வந்தனர். இவர்கள் வந்த பேருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசெந்தூர் அருகே இருக்கும் எவரெடி ஸ்பின்னிங் நிர்வாகம் அருகே வந்துகொண்டிருந்த போது பேருந்தின் பின்புறம் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
உடனே பின்னால் வந்த கார் பேருந்தை விரட்டி பிடித்து பேருந்து ஓட்டுனரான கல்யாண்சிங்கிடம் தீ பிடித்த விபரத்தை கூறியதால், உடனே ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி பேருந்தில் இருந்த 42 பேரையும் கீழே இறங்குமாறு கத்தினார். அதனை கேட்டு பதறி அடித்துக்கொண்டு கீழே இறக்கிய வட மாநிலத்தை சேர்ந்த 42 பேரும் உயிர் தப்பினார்கள். இந்த விஷயம் தீ அணைப்பு துறையினருக்கு தெரியவே தீயை போராடி அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்தது. இது சம்பந்தமாக வேடசந்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
.
இந்த பேருந்து தீவிபத்து எவரெடி மில் அருகே நடந்ததால், எவரெடி மில் தொழிலாளர்கள் அவர்களுக்கு உதவி புரிந்தனர். 42 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி புரிவதற்கு, இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் வினை, திண்டுக்கல் ஆர்.டி.ஓ ஜீவா, மேற்கு தாசில்தார் லட்சுமி, சோனல் உதவி தாசில்தார் முத்து முருகன், ஆர்.ஐ சம்பத் ஆகியோர் உணவு உடை போக்குவரத்து வசதிகள், வழங்கினர். மேலும் எவரெடி மில்ஸ் நிர்வாகத்தின் சார்பாக சேலை, ஷர்ட் போன்றவைகள் கொடுத்து உதவிகரம் நீட்டினார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியை வடமாநில மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றனர். எவரெடி நிர்வாகத்தின் சேவைக்கு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறினார்கள்.