நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழன்(20) கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவரது மகள் பவானி (19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. உறவினர்களான இவர்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பவானியும் முத்தமிழனும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கடந்த சில மாதங்களாக வேறு ஒருவருடன் மாணவி பழகியதால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திங்கள் மாலை 8 மணியளவில் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அருகே முத்தமிழன் கையில் மறைத்து வைத்திருந்த வீட்டுக்கு உபயோகப் படுத்தும் ஆசிட்டை மாணவியின் மீது ஊற்றியுள்ளார். இதனால் எரிச்சல் தாங்காமல் மாணவி அலறியதால் அருகில் இருந்தவர்கள் மாணவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் இருவரையும் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் காவல் துணைகண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.