திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பணியிடங்களுக்கு டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தோ்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2, 18 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. சரியான நேரத்துக்கு அலுவலர்களுக்கு உணவு வழங்கவில்லையென திருவண்ணாமலை, செங்கம், துரிஞ்சாபுரம் உட்பட சில இடங்களில் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தொடங்க தாமதமானது.
அதேபோல் ஆரணியில் வாக்குகள் எண்ணும் பணி இதுவரை தொடங்கவில்லை என்றும், வாக்கும் எண்ணும் அதிகாரிகள் எந்தந்த அறைகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 ஒன்றியங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் முருகதாஸ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.