திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் அனுமத்திரன் கோட்டை வழியாக பொன்னு மாத்திரை புதுப்பட்டி, கொட்டபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு ரெகுலராக மினி பஸ் போய் வருவது வழக்கம். அதுபோல் இன்று காலையில் வழக்கம் போல் அந்த மினி அனுமந்தராயன் கோட்டை வழியாக கொட்டபட்டி வரும் போது குளத்து அருகே திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் அந்த மினி பஸ்சில் வந்த அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த 19 வயதான மார்க்ராஜா சம்பவ இடத்திலையே பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அதுபோல் இந்த பஸ்சில் பள்ளி மாணவ, மாணவிகளும் கூலி தொழிலாளர்களும் பெரும் அளவில் வருவது வழக்கம். இப்படி வந்தவர்களில் தான் 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்பட கூலி தொழிலாளர்களும் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கேள்விப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து காயம்பட்ட மாணவ மாணவிகள் உள்பட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.