Published on 19/05/2024 | Edited on 20/05/2024

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ரஞ்சித் குமார். இவருக்குச் சரவணன் என்ற நண்பர் இருந்துள்ளார்.
இந்த நிலையில் ரஞ்சித் சரவணன் வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது ரஞ்சித் குமாரிடம் சரவணன் உனது தங்கையை அழைத்துவா என்று தவறான நோக்கத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் சரவணனை கத்தியால் குத்தி படுகொலைச் செய்துள்ளார். ரஞ்சித் குமார் குத்தியதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு ரஞ்சித் குமாரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.