திருமா, ஜி.ரா., முத்தரசன், ஜவாஹிருல்லா
நாளை ஆளுநரை சந்திக்கிறார்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நாளை (30.8.2017) காலை 11 மணிக்கு கிண்டி, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசவுள்ளனர். ஆளுநரை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களையும் சந்திக்கவிருக்கிறார்கள்.