கட்டிட தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில், மனைவியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவமும், தன்னை கணவன் - மனைவி இருவமே பயன்படுத்தினர் என கள்ளக்காதலன் கொடுத்த வாக்குமூலமும் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். 33 வயதான இவருக்கு 22 வயதில் அனிதா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பிரதீஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 14-ந் தேதி முதல் ராமனை காணவில்லை. கணவனை காணவில்லை என அனிதா அக்கம் பக்கத்தில் கூறினார். உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 22-ந்தேதி, பணிக்கன்குப்பத்தில் ராமன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த அனிதா கதறி அழுதார். அவரது குடும்பத்தினரும் கதறினர். மேலும் ராமன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராமன் கானாமல் போனது, சடலமாக கிடைத்தது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீசார் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சந்தோஷ்குமார் என்பவர் மீது சந்தேகம் வந்தது. இதையறிந்த சந்தோஷ்குமார் சொர்ணாவூர் கிராம நிர்வாக அலுவலர் இளஞ்செழியனிடம் சரணடைந்தார். காடாம்புலியூர் போலீசார், சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சந்தோஷ்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ராமன், அனிதா ஆகியோர் யார் என்று எனக்கு தெரியாது. சொர்ணாவூரில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு திருமண விழாவில் அவர்களை சந்தித்தேன். அப்போது ராமன், அனிதாவிடம் பழகினேன். இந்த பழக்கத்தால் ராமனிடம் செல்போனில் பேச ஆரம்பித்தேன். நாளடைவில் ராமனின் வீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.
அடிக்கடி சென்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் ராமன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவராக இருந்துள்ளார். இதனால் என்னை தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு நானும் உடன்பட்டேன். இது பலமுறை நடந்தது.
இதற்கிடையே, ராமனை சந்திக்க சென்ற எனக்கு அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ராமன் இல்லாத நேரத்தில் அனிதாவுடன் பேசிக்கொண்டிருப்பேன். அடிக்கடி ராமன் வீட்டுக்கு சென்றதால், அனிதாவுடனான நட்பு கள்ளக்காதலாக மாறியது. ராமன் இல்லாத நேரத்தில் நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம். ஒரு கட்டத்தில் ராமனுடைய ஆசையை நிறைவேற்றுவதில் வெறுப்பு ஏற்பட்டு நான் மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை ராமன் கட்டாயப்படுத்துவார்.
இதையடுத்து, ராமன் செயல்கள் குறித்து அனிதாவிடம் இதுபற்றி தெரிவித்தேன். அப்போது அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். இப்படிப்பட்ட கணவர் தனக்கு வேண்டாம். நாம் இருவரும் சேர்ந்து வாழ ராமனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தெரிவித்தார்.
அதன்படி கடந்த 14-ந்தேதி எனக்கு ராமன் போன் செய்து அழைத்தார். அப்போது, மது பாட்டில் ஒன்றை, வாங்கி அதில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து எடுத்து சென்றேன். இருவரும் வழக்கம் போல் பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரிதோப்புக்கு சென்று, அங்கு தனிமையில் இருந்தோம். அவரது ஆசையை நான் நிறைவேற்றினேன்.
வழக்கம்போல மது வாங்கி வந்திருக்கிறேன் என்று மதுவை கொடுத்ததும், ராமனும் குடித்துவிட்டு மயங்கினார். பின்னர் கைலியை எடுத்து ராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பினேன். ராமனுடன் பழகிய விதம், அவருடைய மனைவியை அடைந்த விதம், ராமனை கொலை செய்த சம்பவம் அனைத்தையும் நினைத்து தவறு செய்துவிட்டோம், என்ன செய்யலாம் என்று எண்ருந்தபோது போலீசார் தன்னை தேடுவது பற்றி அறிந்தவுடன், எப்படியும் மாட்டிக்கொள்வோம், அதுக்கு நாமே போய் சரணடைவோம் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார்.
சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அனிதாவையும், சந்தோஷ்குமாரையும் போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.