Skip to main content

''கமலுக்கு இப்போதுதான் தொகுதி நியாபகம் வந்ததா?'' - வானதி சீனிவாசன் கேள்வி!

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

Vanathi Srinivasan's question!

 

கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மாணவர்கள் மற்றும் மக்களை சந்தித்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார். தேர்முட்டி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். அதேபோல் அம்மன் குளம் பகுதியில் ஆய்வு செய்து மக்களின் தேவையை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இவையெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு என்று மக்களிடையே பேசினார்.

 

Vanathi Srinivasan's question!

 

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ''ஒரு வருடம் கழித்து இப்போதுதான் அவருக்கு தொகுதியில் ஞாபகம் வந்திருக்கு போல இருக்கு. அவர் மனுக்களை வாங்கலாம் ஆனால் வாங்கிக் கொண்டு போய் பிக் பாஸில் வைத்து அதற்கு தீர்வு கொடுக்கலாம் என்று நினைக்க கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நேரடியாக களத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்பதை மக்கள் மக்களிடம் சொல்லட்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்