Published on 29/10/2023 | Edited on 29/10/2023

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே கங்கைகொண்டானில் பாஜக கடலூர் மேற்கு மாவட்ட சார்பாக, திமுக அரசு அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000-த்தை வருவாய் நிலைப்பாட்டைப் பார்க்காமல் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய சிறுபான்மை அணி துணைத் தலைவர் இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம், மாவட்ட பார்வையாளர் மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.