Skip to main content

நான்கு இடங்களில் பிரம்மாண்ட பேரணி... பாஜக மாநில பொதுச்செயலாளர் தகவல்....

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

ஈரோட்டில் இன்று (03.01.2020) பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை  கூட்டம்  மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளா் நரேந்திரன், தேசிய இளைஞா் அணி துணை தலைவா் மு௫கானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கியும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள்.
 

மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, "குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான புரிதல் உள்ளது. எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. இந்த சட்டத்தால் தமிழகத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கோலமிட கற்று கொண்டுள்ளனர்.  மார்கழி மாதத்தில் கோலமிட்டால் நல்லதுதான். ஆனால் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போடப்படும் கோலம் தான் அலங்கோலமாக உள்ளது. 

bjp party rally in erode, chennai discussion meeting

இந்த சட்டத்தில் மக்களுக்கு உள்ள பலன்களை தெளிவு படுத்தும் வகையில் மாநில பாஜக சார்பில் தமிழகத்தில் நான்கு இடங்களில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

அதன்படி வருகிற 7- ஆம் தேதி சென்னையிலும் 8- ஆம் தேதி ஈரோட்டிலும், ஒன்பதாம் தேதி திருச்சி மற்றும் மதுரையிலும் பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. ஈரோட்டில் நடக்கும் பேரணியில் மத்திய மின்சார துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தலைமை தாங்குகிறார். இந்த பேரணியில் ஈரோடு கோவை நீலகிரி திருப்பூர் நாமக்கல் சேலம் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க.வினர் கலந்து கொள்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த பேரணியில் எங்களது கூட்டணி கட்சிகளும் பங்கேற்கும். இதைத்தொடர்ந்து இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாங்கள் வீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என்றார்.
 

பா.ஜ.க நடத்தும் இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி வழங்கக் கூடாது என பெரியாரிய மற்றும் தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்