வேலூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக சார்பில் வில்வநாதன் என்பவரும், அதிமுக சார்பில் ஜோதி ராமலிங்க ராஜா, அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியும் மோதுகின்றனர்.
அதிமுகவின் வாக்குகளை பெரியளவில் அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி பிரித்தார். இதனால் பெரும் கொதிப்பில் இருந்தனர் அதிமுகவினர். கஸ்பா என்கிற பகுதியில் உள்ள வாக்குசாவடி எண் 13, 14 மையங்களை வேட்பாளர் என்கிற முறையில் பார்வையிட சென்ற பாலசுப்பிரமணியத்தின் காரை மடக்கிய அதிமுகவினர், நீ இங்க வரக்கூடாது என மடக்கி தகராறு செய்தனர்.
தகராறில் பாலுவின் கார் கண்ணாடியை உடைத்தனர் அதிமுகவினர். இதனை கேள்விப்பட்ட போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து அமமுகவினரை விரட்டி விரட்டி தாக்கினர். அவர்கள் அடிக்கு பயந்து வீடுகளுக்குள் ஓடிப்போய் மறைந்தனர். வீடுகளுக்குள்ளும் போலிஸ் சென்று தாக்கியது. சுதாகர் என்பவரின் வீட்டுக்குள் போலிஸ் புகுந்து சுதாகரின் மகன்களான சுதர்ஷன், டேவிட்டை அடித்து மண்டையை உடைத்துவிட்டு வந்துள்ளது.
தகராறுக்கு சம்மந்தமில்லாத இளைஞர்கள் இருவரின் மண்டையை உடைத்துவிட்டு போலிஸ் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் தோதல் ஆணையத்துக்கு புகார் அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்கின்றனர்.