Skip to main content

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு பா.ஜ.க தலைவர்களுக்கு பாடை ஊர்வலம்

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு பா.ஜ.க
தலைவர்களுக்கு பாடை ஊர்வலம்



அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய அரசை கண்டித்தும் புதுச்சேரியில் சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது.
 
புதுச்சேரி போராளிகள் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஹெச்.ராஜா, நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், அமீத்ஷா ஆகிய பா.ஜ.க தலைவர்களை பாடையில் தூக்கி இறுதி காரியங்கள் செய்யும் போராட்டம் நடத்த முயன்றனர்.

கொக்கு பார்க்கிலிருந்து தொடங்கிய சவப்பாடை ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றது. ஆனால் காவல்துறையினர் வழிமறித்து தடுத்ததையடுத்து அங்கேயே பாடையை வைத்து மோடி உள்ளிட்டோரின் படங்களை தீயில் எரித்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

- சுந்தரபாண்டியன்
 

சார்ந்த செய்திகள்