பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில அளவிலான நிர்வாகிகள் ஆபாச விவகாரங்களில் அடிக்கடி சிக்குகின்றனர். கர்நாடகாவில் சட்டமன்றத்திலேயே மொபைலில் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி தேசிய அளவில் பரபரப்பானது.
தமிழ்நாட்டில் அக்கட்சியின் முக்கிய மாநில நிர்வாகியும் தேசிய அளவில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பில் கலந்து கொண்டவருமான கே.டி.ராகவன் மொபைல் வழியாக பெண்ணுடன் ஆபாச சாட் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பாகி அவர் கட்சியில் இருந்தும் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதேபோல் தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜக பிரமுகர்கள் சிக்கி வருகின்றனர்.
பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதே ஹனி ட்ராப் சந்தேகம் எழுப்பியுள்ளனர் அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள். இதனால் சமூக வலைதளங்களில் அக்கட்சி மோசமாக விமர்சிக்கப்படுகிறது. தேசிய, மாநில அளவில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜகவினர் சிக்கி வந்த நிலையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகி ஒருவரும் ஆபாச வீடியோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகி ஒருவர், “கட்சியின் ஐடி பிரிவின் மாவட்ட நிர்வாகியான அந்த இளைஞர், சோபாவில் ஆடைகளற்று படுத்தபடி ஒரு பெண்ணுடன் வீடியோ சாட்டில் ஈடுபட்டிருக்கிறார். இது இரு கட்சி நிர்வாகிகளுக்கு வாட்ஸ்ஆப்பில் வந்தது. அதனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டார்கள். இந்த வீடியோ சாட் கே.டி.ராகவனின் வீடியோ சாட்டை விட மிகவும் மோசமாக இருந்தது. அந்த வீடியோவில் இருந்த பெண் யார் எனத் தெரியவில்லை. அது பற்றி எங்கள் கட்சியில் ஒரு குழு தீவிரமாக விசாரிக்கிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட ஐடி விங் நிர்வாகியிடம் விசாரித்தால், அது யார் எனப் பதில் சொல்ல மறுக்கிறார். எங்கள் கட்சியின் மாவட்ட தலைவர் இதெல்லாம் ஒரு விஷயமா எனக் கடந்து போகிறார். சம்பந்தப்பட்ட இளைஞரை காவல்நிலையத்தில் புகார் தரச் சொன்னால், புகார் தர மறுக்கிறார். இது குறித்து மாநிலத் தலைமைக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது என்றார்.
சம்பந்தப்பட்ட நபர் நமக்கு அனுப்பிய அந்த வீடியோ 2 நிமிடம் 52 செகன்ட் இருந்தது. வீடியோவில் அந்தப் பெண் முத்தத்துடன் தொடங்குகிறார். முதலில் முழு ஆடையுடன் உள்ள அந்தப் பெண் போகப்போக தனது முழு உடையையும் களைகிறார். பாஜக நிர்வாகியும் லுங்கியுடன் சோபாவில் படுத்தபடி மோசமான செயல்களில் ஈடுபடுகிறார். ஆப் வழியாகவே இந்த வீடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இருவரில் யார் அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்தது? அல்லது மூன்றாம் நபர்கள் யாராவது ரெக்கார்ட் செய்தார்களா? என்கிற கேள்வி எழுகிறது. இந்த வீடியோ திருவண்ணாமலை மாவட்ட பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.