Skip to main content

திராவிட கட்சிகளுக்கு இணையாக கிராமங்களில் உறுப்பினர்களை சேர்க்கும் பாஜக ! 

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

 


தமிழகத்தில் உள்ள முக்கிய மாநில கட்சிகள் அனைவரும் ஹைட்ரோ கார்பன், கூடன்குளம், புதிய கல்வி கொள்கை, 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக, நீட் தேர்வுக்கு எதிராக, வடமாநிலத்தினருக்கு அதிக வேலைப்பு, இந்தி திணிப்பு, உள்ளிட்ட பல்வேறு தமிழக பிரச்சனைகளை முன்னிறுத்தி போரடிக்கொண்டிருக்கும் நிலையில் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பிஜேபி அரசு தமிழகத்தை குறிவைத்து கட்சிக்கு ஆட்கள் சேர்க்கும் வேலையை மிகவும் துரிதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

 

b

 

கடந்த முறை கட்சி உறுப்பினர் சேர்க்கை என்பதை மிஸ்டு கால் மூலம் சேர்த்த பிஜேபி அது தோல்வி அடைந்ததால் இந்த முறை நேரடியாக களத்தில் இறங்கி ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டார்கெட் கொடுத்திருக்கிறது. 

 

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் தேசியத் தலைவர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் 26.07.2019 அன்று ஆலோசனை நடத்தினார்.

 

b


பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி கடந்த 6-ம் தேதி தொடங்கிய இப்பணி, 3 மாதங்கள் நடைபெறவுள்ளது. அதன்பிறகு கிளை கமிட்டி முதல் தேசியத் தலைவர் வரை உள்கட்சி தேர்தல் நடைபெறும்.

 

தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தமிழக உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

b

 

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் தொடர்ச்சியாக பிஜேபி கட்சிக்கு கிராமங்கள் தோறும் பயணப்பட்டு ஆட்களை சேர்ந்து கொண்டிருந்து மாநில மகளிர் அணியின் செயற்குழு உறுப்பினர் லீமா சிவக்குமாரிடம் உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினோம்.. 

bjp

அவர் நக்கீரனிடம்.. இந்த மாதம் முழுவதும் எங்களுக்கு முழுநேரப்பணி இது தான். எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையை நான் சேர்த்து முடித்து விட்டேன்.  எங்கள் மாவட்ட தலைவர் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகிறோம். கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் போது எங்களுக்கே ஆச்சரியாமாக இருக்கு மக்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது. மக்கள் அவ்வளவு ஆர்வத்தோடு சேர்கிறார்கள். மோடியின் ஆட்சி அவருடைய சாதனைகள் தான் எங்களுக்கு இன்னும் உறுப்பினர் சேர்க்கைக்கு வசதியாக இருக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார். 

bjp

 

தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் தமிழக பிஜேபி தலைவராக புதியவர் ஒருவர் நியமிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் மேல்மட்ட பிஜேபி பிரமுகர்கள். 

சார்ந்த செய்திகள்