குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் பெண்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுத்ததால் போலீசாரை கண்டதும் பெண்கள் குழந்தைகளுடன் ஓட்டம் எடுத்த சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது.
திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் குவிந்தனர். இந்த நேரத்தில் சில பெண்கள் கை குழந்தைகளுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிச்சை கேட்டனர். இதனால் சிலர், பிஞ்சு குழந்தைகளை வைத்துக் கொண்டு இடையூறு செய்யும் வகையில் சிலர் பிச்சை எடுப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த புகாரையடுத்து திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக கோவில் வளாகத்தின் முன்பகுதியில் குவிந்தனர். அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட அந்த பெண்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.