









சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304- வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும் செவல் கிராமத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் இருக்கும் சிலைக்கு தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் வெளிநாடு சுற்றுபயணம் குறித்து பதிலளித்த மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதில் 5.5 லட்சம் கோடி மூதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தனர். அது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தோம். இதுவரை பதில் இல்லை. இதனையே நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் வெளிநாடு பயணம் என்பது தமிழக அமைச்சரவை சுற்றுலாதுறை அமைச்சரவை போல் இருக்கின்றது எனவும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட அவரவர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தி.மு.க, காங்கிரஸ் தலைமை கலந்து ஆலோசித்து யார் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும அவர் தெரிவித்தார். மேலும் வங்கிகள் இணைப்புக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அந்த விவகாரம் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.