Published on 07/02/2020 | Edited on 07/02/2020

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரக அலுவலகத்தில் இன்று (07/02/2020) நடந்த நிகழ்ச்சியில் "வாய்க்கு போடுங்க பூட்டு" என்ற குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சார்ந்த அதிகாரிகளும், ஆக்சிஸ் வங்கியின் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். வங்கி கணக்கு விவரங்களை போனில் யாரிடமும் பகிரக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.