





Published on 04/01/2024 | Edited on 04/01/2024
தமிழகத்தில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், ரூ. 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும், 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.