Skip to main content

“மோடியை அவமதிக்கும் அய்யாகண்ணு மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்..” - திருச்சி பாஜக

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

"Ayyakannu should be prosecuted for insulting Modi ..." - Trichy BJP

 

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்; உ.பி.யில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த மத்திய இணை அமைச்சர் மகன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து மரண தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 34 நாட்களாக கரூர் பைபாஸ் சாலையிலுள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு இல்லத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

இந்நிலையில், திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் மெயின் ரோட்டிலேயே இரும்பு தடுப்புகள் உதவியுடன் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர். 

 

இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் தரையில் அமர்ந்து அய்யாகண்ணுவை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகர் நிருபர்களிடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் அய்யாகண்ணு மீது வழக்குப் பதிவுசெய்து அவரது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாளை முதல் பாஜகவினரும் போலீஸ் மற்றும் அய்யாக்கண்ணுவை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்