Skip to main content

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்..! -ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Awareness for teachers!

 

மாவட்ட முழுக்க உள்ள கல்வி நிலைய நிர்வாகிகளை அழைத்து மாணவ, மாணவிகள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஐ.பி.எஸ்.அவர்கள் தலைமையில் 7 ந் தேதி வேளாளர் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 

இதில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. ஆ.கனகேஸ்வரி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி மற்றும் சக்தி ஆகிய ஐந்து கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

erode

 

கூட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகள், பாலியல் தாக்குதல்கள் குழந்தை திருமணங்கள் குறித்தும் இவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் குறிப்பாக சமீபகாலமாகப் பள்ளி குழந்தைகளுக்குப் பள்ளி ஆசிரியர்களால் ஏற்படும் பாலியல் வன்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு அதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. POCSO Act மற்றும் Juvenil Justice Act குறித்தும், பள்ளிகளில் Students safeguarding: Advisory committee அமைப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு வரும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தும் குழந்தை திருமணம் பற்றியும் உடனடியாக காவல்துறைக்கும், ஈரோடு மாவட்ட காக்கும் கரங்கள் WhatsApp என் 9655220100 க்கும் மற்றும் Childline No. 1098 உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வினை தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அனைத்து இதர ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி. சசிமோகன் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்