Published on 24/09/2019 | Edited on 24/09/2019
தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறித்து இன்று சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதன் தீமைகளை விளக்கும் விதமாக பலர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்ற சிடிபியுவை சேர்ந்த அமுதா கூறியதாவது " பள்ளிக்கூடம், கல்லூரி மற்றும் வீடுகளில் சென்று ஊட்டச்சத்து சம்மந்தமான அனைத்து கொள்கைகளை பரப்பி வருகிறோம். வளரும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ரத்தசோகை, நுண்ணூட்டசத்துக்கள் பற்றியும், சிறுதானியம் உடைய பயன்பாடுகள் பற்றியும் முதலமைச்சர் இடம் வலியுறுத்தினோம். ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பள்ளிக்கூடங்களில் நடத்தியும், பேரணி மற்றும் மனித சங்கிலியும் நடத்துகிறோம். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக அமைப்பது தான் இந்த பேரணியின் நோக்கமாகும் ".