Skip to main content

வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் காவல்நிலைய சரகங்களுக்கு  உட்பட்ட வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் விபத்தை குறைப்பதற்க்கான விழிப்புணர்வு முகாம் கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய கீழக்கரை டி.எஸ்.பி வரும் செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதோடு, வாகனமும் பறிமுதல் செய்யப்படும். மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது, அதேபோல் பள்ளி குழந்தைகளை வேன் மற்றும் ஆட்டோக்களில் குறைந்த அளவே பயணிக்க வேண்டும். மேலும் சொந்த பயன்பாட்டு உள்ள வாகனங்களை (Own Use) வாடகைக்கு ஓட்ட கூடாது. வாகன ஓட்டிகள் பல்வேறு நேரங்களி பல உயிர்களை காப்பாற்ற கூடியவர்கள் நீங்கள், நீங்களே விபத்துகளுக்கும் காரணமாகிவிடாதீர்கள் என்று அங்கு வந்திருந்த 100க்கும் மேற்ப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திலகவதி, எஸ்.ஐ மாடசாமி உட்பட ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனார்.

பாலாஜி                               

சார்ந்த செய்திகள்