சிதம்பரம் தெற்கு வீதியில் மகப்பேறு மருத்துவர் பவித்ரா மணிகண்ட ராஜன் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்தும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும் பெண்களுக்கு இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சிறுவயது முதல் உள்ள பெண்கள், கர்ப்பிணி பெண்கள், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்று நோயால் அவதியுறும் பெண்கள் நேரடியாக அவரிடம் ஆலோசனைகளை பெற்றனர். இந்நிகழ்வு பெண்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அப்போது மருத்துவர், பெண்கள் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் வெட்கப்படக் கூடாது என்றும் உடனடியாக பெண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க தற்போது ஊசி உள்ளது. இதனை சரி செய்து கொள்ளலாம். இதற்கான நடவடிக்கையை அரசு செய்துள்ளது என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரிடம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு பெண்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொலைபேசி வாயிலாக ஆலோசனைகளை பெற்று வருகிறார்கள்..
இந்நிலையில் இவரது சேவையை பாராட்டும் விதமாக மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர் பவித்ராமணிகண்டராஜனுக்கு தேசிய கட்டமைப்பாளர் மற்றும் சிறந்த தொழிற் சேவை விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் நிர்மலா, மிட் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கலைச்செல்வன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் அருள் மொழி செல்வன், மருத்துவர் பிருந்தா, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் நடன சபாபதி, சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலர் ஆறுமுகம் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.